காணொளி: காஸாவில் கொல்லப்பட்ட சிறுமியின் பிரமாண்ட உருவப்படம் ஸ்பெயின் கடற்கரையில் திறப்பு
காணொளி: காஸாவில் கொல்லப்பட்ட சிறுமியின் பிரமாண்ட உருவப்படம் ஸ்பெயின் கடற்கரையில் திறப்பு
காஸா போரில் கொல்லப்பட்ட ஹிந்த் ரஜாப் என்கிற சிறுமியின் பிரம்மாண்ட உருவப்படம், ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள கடற்கரையில் திறக்கப்பட்டது.
ஹிந்த் ரஜாபின் குடும்பம் தப்ப முயன்றபோது அவர்கள் சென்ற கார் இஸ்ரேலுடையது என சந்தேகிக்கப்படும் தாக்குதலுக்கு இலக்கானது.
குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்ட நிலையில் ஹிந்த் ரஜாப் மட்டும் பாலத்தீன செம்பிறை அமைப்பினருடன் பேச முடிந்தது.
அவரை அணுக முயன்ற ஆம்புலன்சும் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் ஹிந்த் மற்றும் ஆம்புலன்ஸ் குழுவினர் உயிரிழந்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



