BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
வெனிசுவேலா கடற்கரையில் எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா
அமெரிக்கப் படைகள் வெனிசுவேலா கடற்கரையோரத்தில் இருந்த ஒரு எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது நிக்கோலஸ் மடுரோ அரசுக்கு எதிராக அமெரிக்கா செலுத்தும் அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
புற்றுநோய் உண்டாக்கும் மரபணு கொண்ட நபர் மூலம் பிறந்த சுமார் 200 குழந்தைகள் - என்ன நேர்ந்தது?
உடலில் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் மரபணு மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரியாமல், விந்தணு தானம் மூலம் ஐரோப்பா முழுவதும் குறைந்தது 197 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ள நபர் குறித்து விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது
'நான் அதிகம் நேசிப்பது..' - ஸ்மிருதி மந்தனா கூறிய பதில் என்ன?
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பாடகர் பலாஷ் முச்சலுடனான தனது திருமணம் முறிந்ததை சமீபத்தில் அறிவித்த நிலையில், கிரிக்கெட்டைவிட வேறு எதையும் தான் அதிகமாக நேசிக்கவில்லை என்றும், அணிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அது விளையாட்டின் மீதான ஆர்வத்தையே காட்டுவதாகவும் ஒரு நிகழ்வில் தெரிவித்துள்ளார்.
சுறா துடுப்பு கடத்தல்: இந்தியாவில்தான் கழிவு, வெளிநாடுகளில் எகிரும் விலை - ஏன் தெரியுமா?
இந்தியாவில் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட சுறா மீன்களின் உடல் பாகங்களில் 65 சதவிகிதம் தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, உலக காட்டுயிர் நிதியம் கூறியுள்ளது.
நேரலை, எஸ்.ஐ.ஆர் பணிகள்: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக பார்க்கலாம்.
இலங்கையில் புயலுக்கு நடுவே மாரடைப்பு - 2 நாட்களுக்கு பின் சிகிச்சை பெற்று உயிர்பிழைத்த நபர்
இலங்கையை தாக்கிய திட்வா புயல் காரணமாக நாட்டிலுள்ள ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு விதமான பாதிப்புகளை எதிர்நோக்கியிருந்தனர்.
ஹிட்லரின் வாரிசை பரிசோதித்த உளவியல் மருத்துவர் - அவருக்கு நேர்ந்த சோக முடிவு
ஹிட்லரின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு, சிறை பிடிக்கப்பட்ட நாஜி தலைவர்களின் உளவியல் தகுதியைப் பரிசோதிக்க ஒரு மனநல மருத்துவர் நியமிக்கப்பட்டார். அவர் நடத்திய உளவியல் பரிசோதனைகளில் தெரிய வந்தது என்ன? அதற்குப் பிறகு அந்த மருத்துவர் என்ன ஆனார்?
காணொளி, 'இரும்பு பட்டறைக்கு வேலைக்கு போனேன்' - உலக கேரம் சாம்பியன் கீர்த்தனா கூறுவது என்ன?, கால அளவு 5,16
சென்னை காசிமேட்டை பூர்வீகமாகக் கொண்ட கீர்த்தனா கேரம் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
கோவா இரவு விடுதி தீ விபத்து- உரிமையாளர்களை தாய்லாந்தில் இருந்து அழைத்து வருவது எவ்வளவு சவாலானது?
தீ விபத்து ஏற்பட்ட கோவா இரவு விடுதியின் உரிமையாளர்கள் தாய்லாந்தில் இருந்தால், அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் என்ன சவால்கள் இருக்கும் என்ற கேள்விகள் எழுகின்றன. குற்றம் சாட்டப்பட்ட நபரை இந்தியாவுக்கு ஒப்படைப்பது தொடர்பாக தாய்லாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையே ஒப்பந்தம் உள்ளதா?
அமெரிக்க விசா பெற புதிய நிபந்தனை - 5 ஆண்டு சமூக வலைத்தள வரலாறு சரிபார்க்கப்படலாம்
பிரிட்டன் உட்பட பல நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், அமெரிக்காவில் நுழைவதற்கான நிபந்தனையாக அவர்களின் ஐந்து ஆண்டு சமூக ஊடக வரலாற்றை வழங்க வேண்டிய சூழல் உருவாகலாம்.
சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி படத்தில் கூட இடம்பெற்ற பாரதியார் வரிகள் எவை தெரியுமா?
பாரதியாரின் பாடல் வ���ிகள் காலங்களைக் கடந்தும் பல கலைஞர்களால் திரைஇசையில் பயன்படுத்தப்படுகின்றன.
'வில்லன்தான் ஆனால் ஹீரோ' - ரகுவரனின் மறக்க முடியாத 10 வில்லன் கதாபாத்திரங்கள்
நடிகர் ரகுவரனுக்கு இன்று 67வது பிறந்தநாள். 49வயதில் அவர் மறைந்தாலும் அவரின் தனித்துவமான நடிப்பும், வசீகர குரலும், ஒருவித ஸ்டைலான உடல்மொழியும் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நிலைத்து நிற்கின்றன. ரகுவரன் வில்லனாக நடித்த டாப் 10 படங்களின் பட்டியல் இதோ:
குறுங்காணொளிகள்
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
தீபத்தூணா, சர்வே கல்லா? திருப்பரங்குன்றம் சர்ச்சையின் பின்னணி
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 'தீபத்தூண்' என்று ஒரு தரப்பினரும் 'சர்வே கல்' என்று மற்றொரு தரப்பினரும் கூறி வரும் பகுதியின் வரலாற்றுப் பின்னணி குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
புதிய தொழிலாளர் சட்டத்தால் நீங்கள் மாதந்தோறும் பெறும் சம்பளம் குறையுமா?
இந்தியாவில் புதிய தொழிலாளர் சட்டம் நவம்பர் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, ஊழியர்களின் மாத சம்பளத்தில் வேறுபாடு இருக்கும். ப்ராவிடண்ட் ஃபண்ட் (PF) மற்றும் பணிக்கொடையும் மாறும்.
இலங்கையில் புயல் மழையின் பாதிப்பை கண் முன்னே காட்டும் 20 புகைப்படங்கள்
திட்வா புயல் இலங்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல இடங்கள் புயலைத் தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை காட்டும் புகைப்படங்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
'பட்டாம்பூச்சி போல உணர்ந்தேன்' - சைக்கிளால் மாறிய புதுக்கோட்டை பெண்களின் வாழ்க்கை
இந்தியாவின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பாக ஆயிரக்கணக்கான பெண்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டனர். அவர்கள் ஓட்டிய சைக்கிள், அவர்களது வாழ்க்கைப் பயணத்தையே மாற்றியது.
செங்கோட்டையன் வருகையால் விஜய் பலம் பெறுவாரா? அதிமுக-வுக்கு என்ன பாதிப்பு?
செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் விஜயின் பலம் கூடுமா? கொங்கு மண்டலத்தில் அதிமுக இதனால் எத்தகைய பாதிப்பை சந்திக்கக்கூடும்?
பிகாரில் பெண்களின் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டுபிடிப்பு - குழந்தைகளுக்கு ஆபத்தா?
பிகாரில் உள்ள ஆறு மாவட்டங்களில், பாலூட்டும் தாய்மார்களின் பால் மாதிரிகளைச் சேகரித்து நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில், பாலில் யுரேனியம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாய்மார்களின் பாலில் கதிர்வீச்சு தன்மை கொண்ட யுரேனியம் கலந்தது எப்படி?
'டிச. 31க்குள் இதை செய்ய வேண்டும்'; உங்கள் பான் - ஆதார் எண்ணை இணைப்பதற்கான 2 எளிய வழிகள்
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) அறிவிப்பில் , டிசம்பர் 31, 2025க்குள், பான் கார்டு வைத்திருக்கும் அனைத்து மக்களும் தங்களது ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எஸ்ஐஆர் படிவத்தில் வாக்காளர் நிரப்ப வேண்டியது என்ன? சந்தேகங்களும் பதில்களும்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. எஸ்ஐஆர் படிவத்தில் நிரப்ப வேண்டிய விவரங்கள் குறித்து வாக்காளர்களிடையே சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. அரசியல் கட்சிகளும் கூட சில சந்தேகங்களை எழுப்பியுள்ளன. எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவத்தில் வாக்காளர்கள் நிரப்ப வேண்டியது என்ன?
ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு வங்கதேசம் கேட்பதால் இந்தியாவுக்கு என்ன நெருக்கடி?
வங்கதேசத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தற்போது இந்திய தலைநகர் டெல்லியில் வசிக்கிறார். அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேச அரசு இந்தியாவிடம் முறைப்படி கேட்டிருக்கிறது. இதனால் இந்தியாவுக்கு என்ன நெருக்கடி?
ஹிட்லரின் டி.என்.ஏ.வில் என்ன இருக்கிறது? 80 ஆண்டுக்கு பின் செய்த முதல் ஆய்வில் தெரியவந்த உண்மை
ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படும் பங்கரில் கிடைத்த அவரது ரத்தக்கறை படிந்த துணியில் விஞ்ஞானிகள் மரபணு ஆய்வு மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்துவது ஏன்?
நீங்கள் வேறிடம் மாறியிருந்தால் அல்லது வீடு பூட்டியிருந்தால் என்ன ஆகும்? எஸ்ஐஆர் பற்றிய பிபிசி கள ஆய்வு
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் எப்படி நடக்கின்றன? அதற்காகக் கொடுக்கப்படும் படிவத்தில் என்ன கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும்?
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?
பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



























































































